பொய்யான தகவல்களை பரப்புவோர் பிடியாணையின்றி கைது
சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்தும் நபர்கள், கோவிட் -19 தடுப்பு வேலைத்திட்டத்திற்கு தடையேற்படுத்தும் நபர்கள், பொய்யான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் நபர்களை பிடியாணை இன்றி கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இப்படியான நடவடிக்ககைள் மூலம் மக்களுக்குள் ஐக்கியமின்மை மற்றும் ஆத்திரத்தை தூண்ட கூடும் என்பதால், அவ்வாறான நபர்களை துரிதமாக கைது செய்து அவ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் அதேவேளை ஊடக சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்தவோ, அவற்றை அடக்கவோ எந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை எனவும் பொலிஸ் தலைமையகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    
    
    
    
    
    
    
    
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan