ரணிலின் கைது தொடர்பில் அநுர தரப்பின் நிலைப்பாடு
குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவரும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப் பாதுகாப்பு ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கைது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் சற்று முன்னர் நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றம் இழைத்தவர்கள் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்ற எமது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணகைள் பூர்த்தியாகியுள்ளதாக ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
