ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்தை திருப்பி அனுப்பிய மூவர் கைது
புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை திருப்பி அனுப்பிய மூவரை புதுகுடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலைகளை திறப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை தொரிவித்து வரும் நிலையில் ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் அதிகரிக்க காரணமாக இருந்த புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை சுதந்திரம் பகுதியில் மக்கள் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பியுள்ளனர்.
பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் இன்று புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் மிக குறைவான ஊழியர்களே பணிக்கு சமூகமளித்துள்ளதாக தொரியவருகிறது.
நேற்றைய தினமும் காலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்தை மறித்த புதுக்குடியிருப்பு பிரதேசசபை உப தவிசாளர் உள்ளிட்ட 10 பேர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆடைத் தொழிற்சாலையை மூட எடுத்த முயற்சிகள் பயனளிக்காத நிலையில் ஊழியர்களை கடமைக்கு செல்லாமல் தவிர்க்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
