இருவேறு குற்றச்சாட்டுக்களில் மூவர் கைது
நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி மற்றும் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டதுடன் அவரது வீட்டிலிருந்து 10 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொர்பில் நோர்வூட் அயரபி தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வதற்கு முற்பட்ட இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


