இலஞ்சம் வாங்க முற்பட்ட பிரதேச செயலாளர் நுட்பமான முறையில் கைது
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ பிரதேச செயலாளர் லஞ்சம் வாங்க முற்படும்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூரியவெவ பிரதேச செயலகத்தின் மேற்பார்வையின் பொது வர்த்தக மையத்தில் வணிக நிலையமொன்றை நடத்திவரும் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற முயற்சித்தபோது இன்று(07.06.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வணிகர் ஒரு ஒப்பந்தக்காரர் என்றும் அவருக்குச் சேர வேண்டிய ஒரு தொகைப் பணத்தை பிரதேச செயலகம் ஊடாக விடுவிப்பதற்கு பிரதேச செயலாளர் ஒரு லட்சம் ரூபா லஞ்சம் கோரியுள்ளார்.
இரகசிய தகவல்
இதன்போது முதற்கட்டமாக ஐம்பதினாயிரம் வழங்க வர்த்தகர் இணக்கம் தெரிவித்துவிட்டு, அதுகுறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் பிரதேச செயலாளரிடம் குறித்த வர்த்தகர் லஞ்சப் பணத்தை வழங்கும்போது மறைந்திருந்த அதிகாரிகள் பிரதேச செயலாளரை கைது செய்துள்ளனர்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
