போராட்டத்தில் இராணுவ வாகனம் முற்றுமுழுதாக எரிப்பு: பலர் காயம் (Live)
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஒரு இராணுவ வாகனம் முற்றாக எறிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
போராட்டத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தால் இரண்டு இளைஞர்கள், பொலிஸார் மற்றும் ஒரு ஊடகவியலாளர் படுகாயமடைந்துள்ளனர்.
பாதைகள் முடக்கப்பட்டுச் சுற்றிவர பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒருவரது கால் துண்டிக்கப்பட்டு அவர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு காலமும் பொறுமையாக இருந்த மக்கள் தற்போது அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.







