அமெரிக்காவில் இருந்து யாழ் சென்றவரை தடுத்து நிறுத்திய இராணுவம்
அமெரிக்காவிலிருந்து நல்லூர் ஆலயத்திற்கு சென்ற போது அங்கிருந்த இலங்கை இராணுவத்தினர் தன்னை தடுத்தி நிறுத்தி வெளியேறுமாறு தெரிவித்ததாக வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவை தலைவர் பாலா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் தமிழர்கள் வாழும் தமிழர் பகுதி நல்லூர் ஆலயத்தில் தமிழில் பூசை வழிபாடுகள் முன்னெடுக்காது சமஸ்கிருதத்தில் முன்னெடுக்கின்றமை வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் புனித தளத்தில் இராணுவத்தினர் துப்பாக்கியுடன் நுழைந்து தன்னை வெளியேற்றியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
