இலக்க தகடு இல்லாத மோட்டார் சைக்கிள்களில் சென்ற இராணுவத்தினர்:சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து
இலக்க தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள்களில் நாடாளுமன்ற வீதிக்குள் வந்த இராணுவத்தினர் சென்ற சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகாவும் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டார்.
சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் எதிரில் காட்சிப்படுத்துவதற்கு பதிலாக இலக்க தகடுகள் வேறு பக்கங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவத்தினரை நிறுத்தி விசாரிக்கும் உரிமை பொலிஸாருக்கு இருக்கின்றது.
எனினும் பொலிஸார், இராணுவத்தினரை தாக்குதவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேபோல் இராணுவத்தினர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்துவதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றேன்.
அதேபோல் ஒவ்வொரு இடங்களுக்கு இராணுவத்தினர் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியான நேரங்களில் எவரேனும் ஒருவர், இராணுவ வீரரிடம் இருக்கும் துப்பாக்கியை பிடிங்கி, இராணுவத்தினரை நோக்கி சுடக்கூடும் என்பதே இதற்கு காரணம் எனவும் அப்போது நிலைமை விபரீதமாக மாறும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.