இலங்கையில் ஆயுதப் படையினருக்கு வழங்கப்பட்டது அதிகாரம்! ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை
இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப்படையினருக்கு, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்த, தனது மக்களையும், பொதுச் சொத்துக்களையும், நாட்டையும் பாதுகாக்கும் வகையில் அதனைப் பராமரிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராணுவ ஊடகம் அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் உடனடியாக விலகிக்கொள்ளுமாறும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு குறிப்பிட்டுள்ளது.
மேலும், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகவும் இராணுவம் தங்களது பலத்தை பிரயோகிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"நாடு அமைதி நிலை பேணப்பட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டுள்ளமையாலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாலும் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயற்படுவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறில்லையெனில் அமைதியை நிலைநாட்டுவதற்காகப் பாதுகாப்புப் படையினர்
முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியேற்படும்"
என்று இலங்கை இராணுவம்
மேலும் அறிவித்துள்ளது.
கொழும்பில் பலத்த பாதுகாப்பு
கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் வீதிகளில் இன்றைய தினம் இராணுவ நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! அதிகரிக்கும் இராணுவ நடமாட்டம் |