கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! அதிகரிக்கும் இராணுவ நடமாட்டம் (Video)
கொழும்பில் பலத்த பாதுகாப்பு
கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் வீதிகளில் இன்றைய தினம் இராணுவ நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் நேற்றைய தினம் பெருந்திரளான மக்கள் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று பதிவான போராட்டங்கள்
அதன்படி நேற்று முற்பகல் பிரதமர் அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மாலையளவில் நாடாளுமன்றத்திற்கு அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் இதன்போது தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இதேவேளை நேற்று பகல் அளவில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.
எனினும் இன்று அதிகாலை ஐந்து மணியுடன் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.