வவுனியா-ஈரப்பெரியகுளம் பகுதியில் விபத்து: இராணுவ வீரர் பலி(Photo)
வவுனியா-ஈரப்பெரியகுளம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட இராணுவ வீரர் மீது பிக்கப் வாகனம் மோதியதில் இராணுவ வீரர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை (21) இடம்பெற்றுள்ளது.
சம்பவம்
இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் வீடு சென்று இ.போ.சபை பேருந்தில் மீண்டும் கடமைக்கு திரும்பியுள்ளார்.
இதன்போது வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஆவணம் ஒன்றை ஒப்படைப்பதற்காக பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.
பாதையின் எதிர் திசையில் வந்த பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இராணுவ வீரரை மோதியதில் இராணுவ வீரர் 7 மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
விபத்து தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ஐ.சீ.பண்டார
மற்றும் ஈரப்பெரியகுளம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி
டீ.சீ.எல்.ஜெயவர்த்தன ஆகியோரின் தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
