புத்தளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் பலி
புத்தளம் கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (11.10.2024) இரவு கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் கரம்பை பாலத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ தோனிகலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவ சிப்பாய் எனவும் புத்தளம் புணர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகள்
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri