விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்
மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (29) காலை 8 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா- சூரங்கள் இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் 24 வயது உடைய இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
விடுமுறைக்கு வீட்டுக்கு சென்று கடமைக்கு திரும்பும் வேலையில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காயமடைந்த இராணுவ வீரர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.