ஆயுர்வேத மருத்துவரிடம் கொள்ளையிட்ட இராணுவ சிப்பாய் கைது
ஆயுர்வேத மருத்துவர் ஒருவரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை வெலிஓயா (மணலாறு) பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வெலிஓயா, பராக்கிரமபுர பிரதேசத்தில் வாகனம் ஓட்டும் பயிற்சிக்கு செல்வதற்காக பாதையில் நின்றிருந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவரிடம் இருந்தே குறித்த சிப்பாய் , தங்க சங்கிலியை பறித்தெடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார்.

பொலிஸார் விசாரணை
இதனையடுத்து வெலிஓயா பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில், நான்கு மோட்டார் சைக்கிள் குழுக்களை ஈடுபடுத்தி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகநபரான இராணுவச்சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரிடம் இருந்து ஆயுர்வேத மருத்துவரின் சங்கிலியை கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan