பல உயிர்களை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைக் கலவரம்! உரிய நேரத்தில் மேலிடத்தில் இருந்து கிடைக்காத கட்டளை
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் உக்கிரமடைந்த போது, மேலிடத்தில் இருந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு சரியான கட்டளைகள் கிடைக்காமையே இந்த பேரழிவுக்குக் காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக் கிழமை வன்முறை வெடித்த போதே, தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கை
திங்கட்கிழமை மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாதிருக்க தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் செய்திருக்க வேண்டியது அவசியம்.
எனினும், அமைச்சரின் அலட்சியத்தால் திங்கட்கிழமை, முதல் நாளை விட பயங்கரமான மோதல்கள் இடம்பெற்று சிறை அதிகாரிகள் பலியாகினர்.

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின்போது உரிய நேரத்தில் தங்களுக்கு மேலிடத்தில் இருந்து எவ்விதக் கட்டளைகளும் கிடைக்காமையே இந்த பேரழிவுக்குக் காரணம் என்று இறுதியில் சிறை அதிகாரிகளே அமைச்சரிடம் நேரடியாகக் குறைபட்டனர்.
அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்திற்குள் கடமையில் இருந்த போதே, இந்த சிறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச இழப்பீட்டை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam