இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி குற்றச் செயல்களை தொடரும் பாதாள உலகக் குழுத் தலைவர்

Sri Lanka Police
By Kamal Jul 15, 2026 01:17 AM GMT
Report

 பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கஞ்சிபானி இம்ரான் கொலைகள் மற்றும் கொடூரமான மனிதநேயமற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, இலங்கையின் பாதாள உலகக் குழுவின் மிகக் கொடூரமான மற்றும் ஆபத்தான குற்றவாளிகளில் ஓருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸாரின் வலையிலிருந்தும் தப்பித்து, வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்து கொண்டு, இலங்கையில் அச்சுறுத்தலான பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை இயக்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி குற்றச் செயல்களை தொடரும் பாதாள உலகக் குழுத் தலைவர் | Kanjipani Hiding And Making Troubles

2019ஆம் ஆண்டு துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதன் பின்னர், அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சிபானி இம்ரான், 2021ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடினார்.

அன்றிலிருந்து போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளின் எல்லைகளைக் கடந்து நடமாடி வரும் கஞ்சிபானி இம்ரான், பல கொடூரமான கொலைகளின் பின்னணியில் இருக்கும் முக்கிய சூத்திரதாரியாக விளங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

'கஞ்சிபானி இம்ரான்' வெறும் உள்நாட்டு பாதாள உலக குழு செயற்பாடுகளை மட்டும் மேற்கொள்ளவில்லை எனவும், தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச பாரிய மாஃபியா கும்பல்களுடன் கைகோர்த்துள்ளதாக  புலனாய்வுத்துறை தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை சர்வதேச தொழில்நுட்பங்கள் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி இயக்கி வரும் கஞ்சிபானி இம்ரானினால் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சாதாரணமானதொன்றல்ல என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் குற்றவாளியைக் கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார், சர்வதேச பொலிஸ் ஊடாக 2024 ஆகஸ்ட் 02 அன்று 'A-888' என்ற இலக்கத்தின் கீழ் 'சிவப்பு அறிவித்தல்' (Red Notice) ஒன்றைப் பிறப்பித்துள்ளனர்.

எனினும், தொடர்ச்சியாகத் தனது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டு, பாதுகாப்புப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவி தலைமறைவாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு கொடூரமான குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது தேசியப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும் எனவும் இந்த நபர் தொடர்பில் தகவல்கள் இருந்தால் குற்றப் புலனாய்வு பிரிவு அல்லது இன்டர்போலிற்கோ தகவல் வழங்க முடியும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US