வெள்ளத்தில் மூழ்கிய மலையகம் - கொட்டகலை மக்களை மீட்கும் முயற்சியில் இராணுவத்தினர்
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக, மலையகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று(03.08.2026) கொட்டகலை - கினிகத்ஹேன பிளாக்வாட்டர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கவனத்திற்கு..
இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை இலங்கை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

நேற்று(02) பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பெய்து வரும் கனமழையால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர்.
