பலரின் முன்னிலையில் மனைவியை தாக்கிய இராணுவ அதிகாரி
பனாகொடை இரைாணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ மேஜர் ஒருவர் பௌர்ணமி தினமான நேற்று பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பிரபலமான விகாரை ஒன்றில் வைத்து தனது மனைவியை தாக்கியுள்ளார்.
சிறுவர்கள் உட்பட விகாரைக்கு வந்திருந்த பெருந்திரளான பக்தர்களுக்கு எதிரில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
மேஜரின் தாக்குதலுக்கு உள்ளான மனைவி, பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தேக நபரான இராணுவ அதிகாரியை பாணந்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் இருந்து வந்த குடும்ப சண்டை காரணமாக பிரிந்து வாழும் மனைவி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேஜருக்கு மகனை காண்பதற்காக விகாரைக்கு அழைத்து வந்திருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சண்டை காரணமாக விகாரைக்கு வந்திருந்த பக்தர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவானதாக கூறப்படுகிறது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri