யாழில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த அவலம் - அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்ணொருவரிடம் இராணுவ அதிகாரி ஒருவர் தவறான நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்திலேயே இடம்பெற்றுள்ளது.
சஹ்ரான் ஹஷீம் குழுவினரின் சத்தியப்பிரமாண சீசீடிவி காணொளிகள் அழிக்கப்பட்டுள்ளன! பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு
இராணுவ அதிகாரி கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த யுவதியிடம் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஆரியகுளம் பகுதியில் பேருந்தை மறுத்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் உடலம்..! நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள முதலமைச்சர் விஜய்
ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபா இரத்தினக்கல் கொள்ளை: கோட்டாபயவிற்கு எதிராகச் சி.ஐ.டியில் முறைப்பாடு
சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan