வவுனியாவில் இராணுவ வீரர் கைது
வீதியால் சென்ற பெண்களிடம் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து சென்று சங்கிலி அறுத்து வந்த இராணுவ வீரரொருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம்(10) வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ வீரர்
வவுனியா, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாமில் பணியாற்றும் மிகிந்தலையைச் சேர்ந்த 30வயதுடைய இராணுவ வீரரே கைது செய்ய்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ வீரரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் பெண் ஒருவரிடம் 1பவுண் சங்கிலியும், கடந்த ஜனவரி முதலாம் திகதி வேப்பங்குளம், 6 ஆம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரிடம் 2 பவுண் சங்கிலியும், கடந்த மார்ச் 31 ஆம் திகதி கூமாங்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1 பவுண் சங்கிலியும், இம் மாதம் முதலாம் திகதி நெளுக்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1 பவுண் சங்கிலியும், இராசேந்திரகுளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1பவுண் சங்கிலியும் அறுத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடமை இல்லாத நேரங்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்திய அவரது சொந்த மோட்டர் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதுடன், அறுக்கப்பட்ட சங்கிலிகளும் அடைவு வைத்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
