இஸ்ரேல் சிறையில் நடந்த கொடூரம்..! வெளியான பதைபதைக்கும் தகவல்கள்
இஸ்ரேல் சிறைகளில் பல மாதங்கள் இருந்த பலஸ்தீன் சிறைவாசிகள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது, இடையில் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும், இப்போது போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து மீண்டும் இகு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவதற்கு முன்பு இரு தரப்பும் தங்கள் வசம் இருந்த பலரை விடுவித்தனர்.
பலஸ்தீன கைதிகள்
அதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் இராணுவம் ஐந்து பலஸ்தீன கைதிகளை விடுவித்திருந்தது.
இந்தநிலையில், இஸ்ரேல் இராணுவத்தின் பிடியில் இருந்தபோது தங்களை எந்தளவுக்கு மிக மோசமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினர் என்பது குறித்த விவரங்களை ஆண்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கிய சில மாதங்களில் இவர்களை இஸ்ரேல் கைது செய்திருக்கிறது. இஸ்ரேலின் சட்டவிரோத போராளிகள் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சட்டத்தின் கீழ் இஸ்ரேலால் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும் என்பதோடு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் காலவரையின்றி சிறையிலும் வைத்திருக்க முடியும்.
இந்தச் சட்டத்தின் கீழ் தான் இவர்களை மாதக் கணக்கில் இஸ்ரேல் இராணுவம் எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் சிறை வைத்திருக்கிறது.
சர்வதேச ஊடகத்தினர் இவர்களுடன் பேசியபோது அவர்கள் பல அதிர்ச்சி சம்பவங்களை விவரித்துள்ளனர்.

மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்
நேர்ந்த கொடூரங்கள்
ஐந்து பேரையும் ஆடைகளைக் கழற்றுமாறு குறிப்பிட்டுள்ளனர்.
கண்களை கட்டி, விலங்கு போட்டு மிக மோசமாக தங்களை இஸ்ரேல் இராணுவம் அடித்துத் தாக்கியாகத் தெரிவித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் மின்சாரம் மூலமும் நாய்களை ஏவிவிட்டும் தாங்கள் சித்திரவதை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முகமது அபு தவிலே தெரிவிக்கையில் "என் மீது கெமிக்கலை போட்டனர். நொடியும் யோசிக்காமல் தீ கூட வைத்துவிட்டனர். பிறகு தீயை அணைக்கிறேன் எனச் சொல்லிக் கொண்டு அவர்கள் அனைவரும் என்னை மாறி மாறி மிருகத்தைப் போல அடித்துத் துன்புறுத்தினர்".
மற்றொரு நாள் தன் மீது இன்னொரு கெமிக்கலை ஊற்றியதாகவும் அதை நீக்கவே ஒன்றரை நாள் ஆனது என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சொட்டு தண்ணீர்
அப்துல் கரீம் முஷ்தாஹா என்ற மற்றொரு நபர் தெரிவிக்கையில், "பலஸ்தீனியர்கள் மீது அவர்கள் இரக்கமே காட்ட மாட்டார்கள்.
எங்களைக் கட்டி வைத்து மிருகத்தை அடித்தது போல அடித்தனர். ஏதோ நாங்கள் தான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை போலக் காட்டுமிரண்டி தனமாக அடித்தனர்.
யாரும் எங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. பல நேரங்களில் மருத்துவ உதவி கூட தரவில்லை" என தெரிவித்துள்ளார்.
கேட்க முடியாத வார்த்தைகள்
மற்றுமொரு நபர் தெரிவிக்கையில், இஸ்ரேல் வீரர்கள் பாலஸ்தீனர்கள் மீது எச்சைத் துப்பி, காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டுவார்களாம்.
மேலும், எங்கள் குழந்தைகளுக்கு என்ன செய்தீர்களோ, அதை நாங்கள் உங்கள் குழந்தைகளுக்குச் செய்வோம் என்றும் மிரட்டுவார்களாம்.
"மருத்துவ உதவி எதுவுமே கிடைக்காது. இதனால் சிறையிலேயே வைத்துப் பல பலஸ்தீனர்கள் உயிரை விட்டனர். சில நேரம் பாலஸ்தீன இளைஞர்களின் ஆடைகளைக் கழற்றச் சொல்லி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடச் சொல்வார்கள்.
இதை ஒரு தண்டனையாகவே அவர்கள் கொடுப்பார்கள். மேலும், இஸ்ரேல் வீரர்கள் தலைகள் மற்றும் கண்கள், காதுகள் போன்ற மென்மையான பகுதிகளைக் குறிவைத்துத் தாக்கினர்" என்றும் குறிப்பிட்டனர்.