அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு
அம்பாறை புறநகர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புறநகர் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மீன்பிடிக்கச் சென்றபோது நேற்றுமுன்தினம்(06.11.2026) இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது சகோதரருடன் மீன்பிடிக்க குளத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த காட்டு யானை அவர்களைத் துரத்தியுள்ளது.
விசாரணை
இருவரும் காட்டு யானையிடமிருந்து தப்பிக்க ஓடியவேளை, எதிர்பாராதவிதமாக ஒருவர் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
யானைத் தாக்குதலில் உயிரிழந்தவர் அம்பாறையில் உள்ள கொண்டவட்டுவான் இராணுவ முகாமில் பணியாற்றி வந்த இராணுவ அதிகாரியாவார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் வனவிலங்குத் திணைக்களத்தின் அம்பாறை கள அலுவலகத்தைச் சேர்ந்த கீஹன் சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் வனவிலங்குத் திணைக்களத்தின் சார்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.