சஹ்ரானுக்கு ஆயுதங்களை விற்ற இராணுவ புலனாய்வு அதிகாரி! காட்டிக்கொடுத்தவரை கொன்ற கொடூரம்
இராணுவப் புலனாய்வு பிரிவில் கேர்ணல் பதவியில் இருந்த தகவுத் அஹமட் அனீஸ் சஹ்ரான் குழுவினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து அவர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டுசுட்டான் இராணுவ முகாமில் பணியாற்றிய குறித்த இராணுவ அதிகாரி அங்கிருந்த ஆயுதக்களஞ்சியத்தில் இருந்தT- 56 துப்பாக்கிகளை எடுத்து சஹ்ரான் குழுவினருக்கு வழங்கியுள்ளார்.
ஒட்டுசுட்டான் முகாமில் இருந்து தான் காத்தன்குடியில் இருந்த சஹ்ரான் குழுவினரின் முகாமிற்கு ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.
அத்தோடு, இராணுவ அதிகாரிக்கு சொந்தமான இரண்டு வான்களில் காபெட்டிற்கு கீழ் மறைத்து வைத்து துப்பாக்கிகளை சஹ்ரான் குழுவினருக்கு அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சட்டவிரோத ஆயுத விற்பனை தொடர்பில் அகமது லெப்பை முகமது நசார் என்ற நபருக்கு விபரங்கள் தெரியவந்தததையடுத்து அவர் மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு அளித்து எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் அறிந்த தகவுத் அஹமட் அனீஸ், முகமது நசாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri