இலங்கையர்கள் நினைவில் கொள்ள வேண்டும்! மக்களுக்கு இராணுவத் தளபதியின் செய்தி
இலங்கையர்கள் தொடர்ந்தும் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் (19.05.2023) வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சொல்ல முடியாத சிரமங்களையும், துன்பங்களையும் அனுபவித்தார்கள்.
இராணுவ வீரர்களின் பங்களிப்பு
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பின்னர் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பெருமளவில் பங்களித்தார்கள்.
இதனை இலங்கையர்கள் தொடர்ந்தும் நினைவில் கொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழித்தல், பேரிடர் மற்றும் கோவிட் தொற்றுநோய் கட்டுப்பாடு ஆகியவற்றின் போது, தங்கள் சொந்த உயிருக்கு ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், இராணுவம், மீட்பு மற்றும் உதவிக்கு வந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |