இலங்கை இராணுவத்தினரின் புதிய திட்டம்! இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்
கைவிடப்பட்ட அரச காணிகளில் விவசாயம் செய்யும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே இன்று காலை கண்டியிலுள்ள பல்லக்கு ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
அரச காணிகளில் புதிய திட்டம் ஆரம்பம்
அரச மற்றும் பெருந்தோட்டங்களின் காணிகளில் பயிர்ச்செய்கை- நாடாளுமன்றில் அறிவிப்பு |
இதன்போது இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தில் பயிர்ச்செய்கைக்கான பணிப்பாளர் சபையொன்று உள்ளது.
பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு படையினரும், மேலதிக படையினரும் ஈடுபடுத்தவுள்ளனர்.
கைவிடப்பட்ட அரச காணிகளில் விவசாயம் செய்யும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவம் தயாராகும் யுத்தம்
மக்களுக்காக உழைக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் இலங்கை இராணுவம் பயிர்ச்செய்கை யுத்தத்திற்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
