அரச மற்றும் பெருந்தோட்டங்களின் காணிகளில் பயிர்ச்செய்கை- நாடாளுமன்றில் அறிவிப்பு
அரச இடங்களில் பயிர்ச்செய்கை
அரசுக்கு சொந்தமான அனைத்து இடங்களும் பயிரிடும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இவை நீண்ட காலத்துக்கு அல்லாமல் குறுகிய காலத்துக்கு மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளாார்.
பெருந்தோட்டங்களிலும் பயிரிடல்
இதன்போது பெருந்தோட்டப்புறங்களில் உள்ள பயிரிடப்படாத காணிகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அமரவீர, பெருந்தோட்டங்களில் பயிரிடப்படாத காணிகளில் பயிரிடல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதேவேளை ஏற்கனவே அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டமான 15ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடுகள் செய்யப்படும்போது செலுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்