கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறும் வழியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த பகுதியில் மக்கள் அமைதியாக இருக்கும் வரையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் அதனை மதித்து வாழ வேண்டும். அமைதியான முறையில் போராடும் வரையில் எந்த பிரச்சினையும் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைதியான முறையில் இருந்து வன்முறை நிலைக்கு மாறினால் பிரச்சினை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
