இலங்கை மக்கள் மீது இராணுவத் தளபதி கொண்டுள்ள நம்பிக்கை!
புத்திசாலித்தனமான இலங்கை மக்கள் சுகாதார பழக்கங்களுக்கு ஏற்றவாறு செயல்படுவார்கள் என்று நம்புகிறோம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
இலங்கையில் நாளாந்தம் கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 200க்கும் குறைந்துள்ளது.
கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் சுகாதாரத் துறையின் திட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பண்டிகை காலங்களில் கோவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கோவிட் - 19 தொற்று தொடர்பில் நடந்துகொள்வது என்பது குறித்து இலங்கை மக்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும், எனவே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
அனைவரும் வைரஸால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அடுத்த சில நாட்களில் இலங்கையில் மக்களின் நடத்தைகளைப் பொறுத்து கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்பு உள்ளது.
புத்திசாலித்தனமான இலங்கை மக்கள் இந்த சுகாதார பழக்கங்களுக்கு ஏற்றவாறு செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இருந்தால் அனைத்து பகுதிகளிலும் சீரற்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் கூறினார்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
