வவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர் - அச்சத்தில் மக்கள்
வவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரித்து வருவதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வவுனியா- புதிய வேலர் சின்ன குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாக செல்லும் நான்கு இராணுவத்தினர் இவ்வாறான பதிவு மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் இப் பதிவின் போது குடியிருப்பாளர்களிடம் வாழ்வாதாரம் தரப்போகின்றோம் என இராணுவத்தினர் தெரிவிப்பதாகவும் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம், வயது தொலைபேசி இலக்கம் என்பனவும் கோரப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சூழலில் இராணுவத்தினரால் இவ்வாறு தகவல் சேகரிக்கப்படுகின்றமை தொடர்பில் தமக்கு அச்சமான நிலை காணப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan