வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதிய இராணுவ பேருந்து - ஒருவர் வைத்தியசாலையில் (Photos)
வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவ பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (12.11.2022) மதியம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரிலிருந்து புகையிரத வீதியூடாக மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துக்கொண்டிருந்த போது அதே பாதையில் பயணித்த இராணுவத்தினரின் பேருந்து குறித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பொலிஸார் விசாரணை
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri