ஞானக்காவின் ஹொட்டலை நிர்மாணிக்கும் இராணுவத்தினர்:அனுரகுமார திஸாநாயக்க
அனுராதபுரத்தை சேர்ந்த ஞானக்கா என்ற பெண்ணுக்கு சொந்தமான ஹொட்டலை நிர்மாணிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தவறான செயல் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் உறுப்பினர்களை ஜனாதிபதியின் சாஸ்திரம், மந்திரத்தை உச்சரிக்கும் ஒருவரிடத்திற்கு அனுப்பி வைக்க முடியுமா? இராணுவத்தினருக்கும் மரியாதையை இது காட்டுகிறது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு உட்பட சில அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து உடனடியாக தேடிப்பார்க்குமாறு அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் கோருகிறேன்.
அதற்கான தகவல்களை என்னால், வழங்க முடியும். இராணுவத்தினரை தனியார் திட்டப் பணிகளில் ஈடுபடுத்துவது தவறான செயல். இராணுவத்தினரை அரசியல் வேலைகளிலும் தனியார் வேலைகளிலும் இப்படி அடிக்க ஈடுபடுத்துகின்றனர்.
கடற்படையின் உறுப்பினர்களும் தனியார் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இராணுவத்தின் கீழ் மட்ட உறுப்பினர்களை இப்படி தனியார் பணிகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நாட்டுக்காக முக்கிய பங்களிப்பை செய்துள்ள இராணுவத்தினருக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும். மேலும் பாதுகாப்பு படையினரின் உணவு குறித்து பாதுகாப்பு அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.
பொலிஸ் அதிகாரிகளும் தற்போது அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு அதிகளவான வெற்றிடங்கள் நிலவுகின்றன.
நாட்டில் சுமார் 17 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு வெற்றிடம் நிலவுகளினது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri