களமிறங்கும் இராணுவத்தினர்! மோதல்கள் வெடிப்பதால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் (Video)
புதிய இணைப்பு
எரிபொருளுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது.
இதனால் இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவ சிப்பாய்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


முதலாம் இணைப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு இடையில் மோதல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
அண்மையில் நிட்டம்புவ பிரதேசத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த இருவருக்கு இடையிலான மோதல், கொலைச் சம்பவமாக மாறியிருந்தது.
வரிசையில் காத்திருக்கும் நபர்கள் உயிரிழக்கும் சந்தர்ப்பங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்கம், இராணுவத்தினை கடமையில் ஈடுபடுத்தி, எரிபொருள் விநியோகத்தை சீராக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தை கண்காணிப்பதற்கு இராணுவத்தை ஈடுபடுத்துவதாக இராணுவப் பேச்சாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.