சுற்றிவளைக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியம்! குவிக்கப்பட்ட படையினர் - செய்திகளின் தொகுப்பு
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலேலிய பிரதேசத்தில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடமொன்றை நேற்று(29.08.2023)பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளின் 2 பாகங்களும், வாயு துப்பாக்கி ஒன்றும், ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் ஈய குழாயும், 2 கிலோகிராம் தொகையும், டிரில் இயந்திரம் ஒன்றும் வெவ்வேறு அளவிலான 5 கத்திகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலேலிய பிரதேசத்தை சேர்ந்த 32 மற்றும் 62 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (30.08.2023) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,