அமெரிக்காவில் பதற்றம்.. களமிறக்கப்பட்ட ஆயுதப்படையினர் - ட்ரம்ப் மீது கடும் அதிருப்தி!
அமெரிக்காவின் ஒரேகான் மாநில ஆயுதப்படையினரை போர்ட்லாந்துக்கு அனுப்புவதை நீதிமன்றம் தடை செய்ததால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், கலிபோர்னிய ஆயுதப்படையினர் 300 பேரை அங்கு அனுப்பியுள்ளது.
போர்ட்லாந்துக்கு ஆயுதப்படையினரை அனுப்புவதற்கு எதிரான குறித்த தடை உத்தரவு நீதிமன்றத்தால் 60 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
போர்ட்லாந்தில் குடிவரவு மற்றும் சுங்க கட்டிடத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு ஆயுதப்படையினர் தேவை என ட்ரம்ப் கூறிய பின்னரும் இந்த தடை உத்தரவை நீதிபதி பிறப்பித்திருந்தார்.
ட்ரம்ப் மீது விமர்சனங்கள்
இந்நிலையில், கலிபோர்னிய ஆயுதப்படையினரை ட்ரம்ப் நிர்வாகம் அங்கு அனுப்பியுள்ளது.
இவ்வாறிருக்க, இராணுவத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் ட்ரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கலிபோர்னியா இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் என ஆளுநர் குறித்த மாநில ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 12 மணி நேரம் முன்

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
