சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை விவகாரம்! தீர்வு கூறிய அர்ச்சுனா எம்.பி
தையிட்டி விகாரை விடயத்தை வைத்து முன்னெடுக்கப்படும் அரசியல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தெரிய வருகையில்,
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், குறித்த விகாரை தனியார் காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு அல்லது அபிவிருத்தி நோக்கங்களின்றி குறித்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளித்திருந்தார்.
இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், விகாரை கட்டப்பட்ட காணியின் உரிமையாளர்கள் மற்றுமொரு காணியைப் பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறித்த கூற்றை மறுத்துக் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் பதில் வழங்கினார்.
இதேவேளை அவர்களைத் தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தையிட்டி விகாரை விடயத்தை வைத்து முன்னெடுக்கப்படும் அரசியல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
மாறாக விகாரை கட்டப்பட்ட இடத்தின் உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதன் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அர்ச்சுனா,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |