தற்போதைய இலங்கை அணியை கடுமையாக விமர்சித்த அர்ஜுன ரணதுங்க
தற்போதைய கிரிக்கெட் வீரர்களுக்கு அத்தியாவசிய திறமைகள் இல்லை என்று இலங்கையின் முன்னாள் அணி தலைவர் அர்ஜுன ரணதுங்க(Arjuna Ranatunga) விமர்சித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி
இந்தநிலையில், 1996 ஆம் ஆண்டு செயற்பட்ட இலங்கை அணியை பொறுத்தவரையில், தற்போதைய இந்திய டெஸ்ட் அணியை இந்தியாவில் வைத்தே எளிதாக தோற்கடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
1990 முற்பகுதியில் தாம் இலங்கை அணியின் தலைவராக இருந்தபோது, ஒரு வீரராக கவாஸ்கர், வெங்சர்க்கார், அமர்நாத் போன்றோரை இரண்டு முறை வெளியேற்ற முடியவில்லை.
அசாருதீன், டெண்டுல்கர், வினோத் கம்ப்ளி, டிராவிட் போன்றோரும் இதனை தொடர்ந்தனர் எனினும் இப்போது இந்திய அணியில் அந்த தரம் இருக்கிறதா? என்பது கேள்விக்குறியது என்று ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தற்போதுள்ள இந்திய டெஸ்ட் அணிக்கு எதிராக தமது 1996 ஆம் ஆண்டு அணி விளையாடினால்,இரண்டு முறை இந்திய அணியை இலங்கை அணி வெளியேற்றும் என்றும் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள்
அத்துடன் இந்தியாவில் வைத்தே இந்திய அணியை இலங்கை அணி தோற்கடிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தாம், வெளிப்படையாக மற்றும் நேரடியாக கூறுவதாக அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில், ஒருவர், தமது சொந்த நாட்டிற்காக விளையாடுவதன் மதிப்பு இப்போது குறைந்து வருவதாகவும், எதிர்காலத்தில் அதன் பங்கு இல்லாமல் போய்விடும் என்றும் கூறிய ரணதுங்க,டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு 'தரம், நுட்பம் மற்றும் மூளை' தேவை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்களான தங்களுக்கும் இதே பிரச்சனை இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், நாட்டுக்காக விளையாடாமல் உரிமையாளர்களின் கிரிக்கெட் விளையாடுவதற்கு வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது, இறுதியில், ஒருவர் நாட்டிற்காக விளையாடுவதன் மதிப்பு இல்லாது போய்விடும் என்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |