உயிர் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டேன்: தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பிரசார நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் நான் விலகி விட்டேன் என போலியான பல தகவல்கள் வெளிவந்தாலும் யாரும் இதனை நம்ப வேண்டாம்.
நான் ஒருபோதும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் பின்வாங்கப் போவதில்லை.
வடக்கு - கிழக்கில் மாத்திரம் பிரசார நடவடிக்கையில் ஈடுப்பட்டாலும் கூட ஏனைய தென் பகுதியிலுள்ள தமிழ்பேசும் மக்கள் விரும்பினால் வடக்கு - கிழக்கு மக்கள் எடுக்கும் முடிவுக்கு தங்களது ஆதரவை பெற்று தாருங்கள்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.