எந்த பிரதான கட்சி தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை: அரியநேத்திரன் திட்டவட்டம்

Election Commission of Sri Lanka Batticaloa P Ariyanethran
By Independent Writer Sep 12, 2024 11:43 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் என்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை. அவ்வாறு அழைத்தாலும் நான் செல்லப் போவதும் இல்லை என தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் (Ariyanethran) குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (12.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வெற்றியை அல்லது இலக்கை உடைப்பதற்கு இப்போது பல சக்திகள் இறங்கியுள்ளன.

இந்த நபர்களினால் இன்னும் சில தினங்களில் அல்லது தேர்தலுக்கு முதல் நாளிலோ என்னைப் பற்றி துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்படலாம். நான் தேர்தலில் இருந்து ஒதுங்கி விட்டேன் என்று கூட அவர்களால் துண்டுப் பிரசுரங்கள், காணொளிகளை வெளியிடலாம்.

கிழக்கிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் முன்னெடுப்பு

கிழக்கிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் முன்னெடுப்பு

இறுதி போர் 

இவை எதையும் மக்கள் நம்ப வேண்டாம். தமிழ் மக்களுக்கு நான் ஒன்று கூறுகின்றேன். நீங்கள் குழப்பமடையத் தேவையில்லை, விருப்பு வாக்கு, விருப்பத் தேர்வு என்கின்ற விடயத்தில் பலர் மக்களை குழப்பமடையச் செய்து வருகின்றனர்.

எந்த பிரதான கட்சி தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை: அரியநேத்திரன் திட்டவட்டம் | Ariyanethran Press Meet In Batticaloa

மக்களாகிய நீங்கள் எனது சங்கு சின்னத்திற்கு மட்டும் ஒரு புள்ளடி இடுங்கள் அவ்வளவுதான். இன்று இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இலங்கையில் மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏன் என்றால் எங்கள் விடுதலைப் போராட்டத்தில், அகிம்சை ரீதியிலான, ஆயுத ரீதியிலான இராஜதந்திர செயற்பாட்டிலே கூர்மை பெற்ற போது எல்லோருமே இதை அவதானித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

அவர்கள் எல்லோருமே தவறு விட்டிருக்கின்றார்கள். இலங்கை மட்டும் எங்களை ஏமாற்றவில்லை இந்தியாவும் எங்களை ஏமாற்றி இருக்கின்றது. இறுதிப் போரில் இனப்படுகொலையை செய்வதற்காக பல நாடுகள் இலங்கைக்கு துணை போயிருக்கின்றன.

எனவே, அவர்கள் அனைவருக்கும் ஒரு மனச்சாட்சி இருக்கின்றது. இணைந்த வடக்கு கிழக்கிலே ஒரு அரசியல் தீர்வை தமிழர்களுக்கு வழங்க அவர்கள் தவறியிருக்கின்றார்கள். அந்த தவறை சுட்டிக்காட்ட வேண்டிய உரிமை வடக்கு கிழக்கு மக்களுக்கு இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் குறித்து வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

பொது வெட்பாளர் 

அதை ஒரு ஜனநாயக வடிவமாக நாங்கள் காட்ட இருக்கின்றோாம். தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வேட்பாளராக நான் வரவேண்டும் என்று ஆசைப்படவில்லை.

எந்த பிரதான கட்சி தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை: அரியநேத்திரன் திட்டவட்டம் | Ariyanethran Press Meet In Batticaloa

வேட்பாளராக என்னை தெரிவு செய்வதற்கு முன் நானே இரண்டு பேரை வேட்பாளராக முன்மொழிந்தேன். இறுதியாக சில மாற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக நான் இதை ஏற்றிருக்கின்றேன்.

அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழரசுக் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சியில் போட்டியிடுவது தமிழரசு கட்சியை விட்டு விலகிச் செல்வதாக கருதப்படலாம்.

நான் இன்னுமொரு கட்சியில் அங்கத்துவம் பெறவில்லை. இப்பொழுதும் தமிழரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன். நான் தமிழ் தேசிய கொள்கையுடையவன் கட்சியின் கொள்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன், அதே போன்று எனது தமிழ் தேசிய கொள்கையினையும் கட்சி ஏற்றுக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

சுயலாப அரசியலுக்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடே பொதுவேட்பாளர் : டக்ளஸ் பகிரங்கம்

சுயலாப அரசியலுக்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடே பொதுவேட்பாளர் : டக்ளஸ் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US