கிழக்கிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் முன்னெடுப்பு
கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் பிரசாரங்கள் போன்றவற்றில் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்பார்வை நடவடிக்கைகள்
அக்குழு, மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படுகின்ற பிரதான வேட்பாளர்களின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கண்காணிப்பு குழுவினர் நேரடியாக விஜயம் செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகள், பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் ஊடகங்களின் சுதந்திர செயற்பாடு சம்பந்தமான விடயங்களை தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு நீண்டகால தேர்தல் நோக்கு மேற்பார்வையாளர் சிசிலியா கிவேணி தலைமையில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தேர்தல் நடவடிக்கைகள் சம்பந்தமான பணி மேற்பார்வை நடவடிக்கைகள் பார்வையிடப்பட்டுள்ளன.
மேலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட பொதுமக்கள் கட்சி ஆதரவாளர்களிடம் கூட்டங்களில் கலந்து கொண்ட நோக்கு சம்பந்தமாகவும் தேர்தல் சம்பந்தமாகவும் அக்குழுவினர் கலந்துரையாடுகின்றனர்.

அத்துடன், ஊடகவியலாளர்களிடமும் இடம்பெறுகின்ற தேர்தல்களில் சுதந்திரமாகப் பணியாற்றுகின்ற தன்மை, எதிர்நோக்கப்படும் சவால்கள் அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் சம்பந்தமாகவும் நேரில் சந்தித்து கருத்துக்களைப் பெற்று வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam