ஒப்பற்ற தமிழ் தேசிய கொள்கைபற்றாளர் அமரர் சிவாஜிலிங்கம் - அரியநேத்திரன்

Jaffna M. K. Shivajilingam Tamil National Alliance
By Rusath Nov 15, 2026 12:00 PM GMT
Report

சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய விடுதலைக்காக தொடர்ச்சியாக உறுதியாக செயல்பட்டவர் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும், மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் 1957, ஆகஸ்ட் 15இல் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தவர். 2026, நவம்பர் 14 இரவு இயற்கை எய்தினார். ஈழவிடுதலைப்போராட்டத்தில் தமிழீவிடுதலை இயக்கத்தின் ஆரம்ப கால போராளியாக இணைந்து செயல்பட்டவர், தமிழ் தேசிய விடுதலைக்காக தொடர்ச்சியாக உறுதியாக செயல்பட்டவர்.

பின்னர் தேர்தல் அரசியல் செயல்பாட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னர் இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் அவர் வேட்பாளராக போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக தெரிவானார். 2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில்சிவாஜிங்கம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் வேட்பாளராக யாழ்ப்பாணமாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.

மயிரிழையில் காயங்களுடன் உயிர் தப்பினர் 

அந்த தேர்தல் பிரசாரத்தின்போது யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் 2001, நவம்பர் 28, மாவைசேனாதிராஜா, என்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீது ஈபிடீபியால் நடத்தப்பட்டதாக்குதலில் மயிரிழையில் காயங்களுடன் உயிர் தப்பினர் என்பது வரலாறு. 2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சிவாஜிலிங்கம் 2010 ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடு 9,662 வாக்குகளைப் பெற்று ஒன்பதாவது இடத்தை பெற்றார். 2010 தேர்தலில் இவரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது வேட்பாளர் பட்டியலில் இணைக்கவில்லை. இதனை அடுத்து இவர் தான்பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் விலகி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

இக்கூட்டமைப்பின் சார்பில் இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகவில்லை. இதனால் 2011 யூன் மாதத்தில் தனது கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் டெலோ வில்இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பில் செயல்பட்டார். 2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகவல் வெட்டித்துறை நகரசபைக்குப் போட்டியிட்டு நகரசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒப்பற்ற தமிழ் தேசிய கொள்கைபற்றாளர் அமரர் சிவாஜிலிங்கம் - அரியநேத்திரன் | Ariyanethiran Statement

சுயேச்சை வேட்பாளராகப் போட்டி

2013 மாகாணசபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வடமாகாண சபைஉறுப்பினரானார். மாகாண சபை உறுப்பினருக்கான பதவிப்பிரமானத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் கிராமத்தில் சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் எடுத்துக் கொண்டார். 2019 ஜனாதிபதித் தேர்தல். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 12,256 வாக்குகளைப் பெற்றார்.

2024, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்னை (பா.அரியநேத்திரன்) ஆதரித்து வடகிழக்கில் பிரசாரங்களை முன்எடுத்தார். 2025, மே மாதம் வல்வெட்டித்துறை நகரசபையின் தேர்தலில் வெற்றிபெற்று தவிசாளராக தெரிவானார்.

தேசியதலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்கள் 2010 ஜனவரி 6இல் பனாகொடை இராணுவ முகாமில் உயிரிழந்தவேளை அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனம் அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள ஊறணி இந்து மயானத்தில் சிவாஜிலிங்கம் எடுத்து சென்று அதனை நடத்தினார், தேசிய தலைவரின் தாய் பார்வதி அம்மா, 2011 பெப்ரவரி 20 இல் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் மரணித்வேளையில் அவருடைய இறுதி நிகழ்வை சிவாஜிலிங்கம் தாமே முன்னின்று நடத்தினார்.

நாடாளுமன்றத்திலும் சரி, பொது இடங்களிலும்சரி பல்வேறுபட்ட கவன ஈர்ப்பு போராட்டங்களை துணிச்சலுடன் முன்நின்று அச்சம் இன்றி பங்கேற்று குரல் கொடுப்பதில் இவர் எப்போதுமே பின்நிற்கவில்லை. இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் இணைந்து பின்னர் அரசியல் நீரோட்டத்தில் தமிழ்தேசிய கொள்கைப்பற்றுடன் இறக்கும் வரை அற்பணிப்புடனும் துணிச்சலுடனும் செயல்பட்ட ஒரு தமிழ் தேசியவாதியான அமரர் சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். 

குகைக்குள் கைக்குழந்தையுடன் சிக்கிய காணாமல்போன சிறுமி! அமைச்சர் எடுத்துள்ள அவசர நடவடிக்கை

குகைக்குள் கைக்குழந்தையுடன் சிக்கிய காணாமல்போன சிறுமி! அமைச்சர் எடுத்துள்ள அவசர நடவடிக்கை

மக்கள் நிராகரித்தால் வீடு செல்லத் தயார் - அமைச்சர் லால்காந்த அதிரடி

மக்கள் நிராகரித்தால் வீடு செல்லத் தயார் - அமைச்சர் லால்காந்த அதிரடி

மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US