பதவி ஏற்றதும் வாக்குறுதி மறக்கும் ஜனாதிபதிகள் மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் குறித்து கேள்வி
75 வருடங்களாக பதவி ஏற்றதும் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறக்கும் ஜனாதிபதிகள் மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் குறித்த கேள்வியை நிராகரிக்க கூடாது என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“2009ஆம் ஆண்டுக்கு பிறகு 3 ஜனாதிபதிகளை நாங்கள் ஆதரித்து அவர்களை தமிழ் மக்களுக்கான கருவிகளாக பயன்படுத்தி வாக்களித்திருந்தோம்.
ஆனால், அவர்கள் பதவியை பெற்றதும் வாக்குறுதிகளை மறந்து விட்டார்கள். இந்நிலையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நியமிக்கலாமா என்னும் கேள்வி பலரின் மத்தியிலும் இருக்கின்றது.
எனவே, அதனை முற்றிலும் நிராகரிக்காமல் நாம் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |