டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சபையில் வாக்குவாதம்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக இன்று (28.12.2023) பேசப்பட்டபோதே குறித்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஒரு கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து உரையாற்றிக் கொண்டிருந்த நபர் தீடீரென கூட்டத்திற்கு நடுவே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வந்ததால் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. தொடர்ந்து, அமைச்சர் கட்சி ஆதரவாளர்களை அழைத்து கட்சி கூட்டத்தை நடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருந்தபோதும், அமைச்சர் குறித்த நபர் பொது அமைப்பை சேர்ந்தவர் என தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
