கொழும்பில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல பகுதிகள் இன்றும் நாளையும் அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகத்துவாரம் பொலிஸ் பிரிவு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை மேற்கு கிராம சேவகர் பிரிவு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை கிழக்கு கிராம கிராம சேவகர் பிரிவு, பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, மிரிஹான பொலிஸ் பிரிவில் தெமலவத்தை (பிற்றகோட்டே) ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
நாளை அதிகாலை 5.00 மணி முதல் கம்பாஹ மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கீழ் காணும் பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளன.
பேலியகொட பொலிஸ் பிரிவில்,பேலியகொடவத்த கிராம சேவகர் பிரிவு, மீகாவத்த கிராம சேவகர் பிரிவில் பட்டிய வடக்கு ரோஹன விகாரை மாவத்தை
பேலியகொட கங்கபட கிராம சேவகர் பிரிவில் நெல்லிகஹாவத்த மற்றும் பூராணகொட்டுவத்த ஆகிய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளன.
கிரிபத்கொட பொலிஸ் பிரிவில்,விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ ஜெயந்தி மாவத்தை.
அதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என தேசிய கொரோனா தடுப்பு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.