நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்
நாளை (25) அதிகாலை முதல் நான்கு மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை,தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள் பினவருமாறு,
மாத்தளை மாவட்டம் - கும்புக்கொல்ல கிராம சேவகர் பிரிவின் கலேவெல காவல்துறை பிரிவு
களுத்துறை மாவட்டம் - யட்டியன தெற்கு கிராம சேவகர் பிரிவு
மாத்தறை மாவட்டம் - உயன்வத்த கிராம சேவகர் பிரிவு, உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம் - ரன்வானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகள்
தொலேகந்த கிராம சேவகர் பிரிவு
ரம்புக்கன்ன கிராம சேவகர் பிரிவு
கத்லான கிராம சேவகர் பிரிவு
தனபெலகிராம சேவகர் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம் - கலவான காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகள்
குடுமிடிய கிராம சேவகர் பிரிவு
குடவ கிராம சேவகர் பிரிவு
தெல்கொட தெற்கு கிராம சேவகர் பிரிவு
தெல்கொட மேற்கு கிராம சேவகர் பிரிவு தவ்லகமகிராம சேவகர் பிரிவு
தபஸ்ஸகரகந்த கிராம சேவகர் பிரிவு
வேம்பியாகொட கிராம சேவகர் பிரிவு
வத்தாகல்ல கிழக்கு கிராம சேவகர் பிரிவு
வெத்தாகல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு
இதேவேளை,இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் நாளை (25) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் 4 மாவட்டங்களை சேர்ந்த 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நுவரெலிய மாவட்டத்தை சேர்ந்த சந்திரிகாமம் தோட்டத்தின் NLDB விலங்குப் பண்ணை, சந்திரிகாமம் தோட்டத்தின் சந்திரிகாமம் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.