தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்
கொவிட் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்த கொழும்பு, இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆராமய பகுதியின் 66ஆம் தோட்டமும் தலங்காம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாஹென தெற்கு மற்றும் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டுட பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேபொன்று, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹன்கம கொஸ்கல தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை உடன அமுலுக்கு வரும் வகையில் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.