கொழும்பு - மட்டக்குளி துப்பாக்கிச்சூடு சம்பவம்: விசாரணையில் வெளியான பின்னணி
கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பின்னணியில் பாதாளக் குழு மோதல் தொடர்புபட்டுள்ளது எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், முச்சக்கரவண்டியில் இருந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் தகவல்
இதற்கமைய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 40 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
‘படா ரஞ்சி’ என அழைக்கப்படும் செல்வம் ஆறுமுகன் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தலைமறைவாகியுள்ள பாதாளக் குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் உதவியாளராக இவர் செயற்பட்டுள்ளார் எனக் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும், பாதாளக் குழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரானின் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அந்தச் சம்பவத்துக்குப் பழிதீர்க்கும் வகையில் கஞ்சிபானி இம்ரானின் சகாக்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கஞ்சிபானி இம்ரான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தாலும், பின்னர் பிணையில் விடுதலையானதும், நாட்டைவிட்டு தப்பியோடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
