கொழும்பில் ஆறுமுகம் துஷ்யந்த் சுட்டுக் கொலை
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு - வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு - மட்டக்குளிய, ரண்திய உயன வீட்டுத் தொகுதிக்கு அருகில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
'பட ரஞ்சி' அழைக்கப்படும் செந்தில் ஆறுமுகம் துஷ்யந்த் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
தேசிய வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் போதைப்பொருள் விற்பனையாளரான 'புகுதுகண்ணா' என்பவரின் நிதி நிர்வாகியாக உயிரிழந்த நபர் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தத்துள்ளனர்.
''நேற்றிரவு 8.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவரது மார்பு மற்றும் இடது கையில் துப்பாக்கி குண்டுகள் காணப்பட்டன. போதைப்பொருள் கடத்தல் கும்பலினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம்'' என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
