நபர் ஒருவரை மிக கொடூரமாக கொலை செய்த பெண்
பிபில நாகல பிரதேசத்தில் நபரொருவரை கத்தியால் வெட்டி, தீ வைத்து கொடூரமாக கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நடத்தும் கடைக்கு சென்ற நபரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்த பெண்
குறித்த நபர் நாகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பெண்ணின் கடைக்கு நேற்று பிற்பகல் சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த பெண்ணுக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோபமடைந்த பெண் பெரிய கத்தி ஒன்றால் அந்த நபரை கொடூரமாக வெட்டியுள்ளார். இதனையடுத்து கடையில் இருந்த பெட்ரோலை ஊற்றி அவரை தீயிட்டு எரித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
