நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்: சதுரங்கத்தில் அர்ச்சுனா முதலிடம்
நாடாளுமன்ற வளாகத்தில் ஐந்தாவது வருட நிகழ்வாக நடைபெற்ற உள்ளக விளையாட்டு நிகழ்ச்சியில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா, படைக்கல சேவிதர் குசான் ஜெயரத்ன ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
இந்தநிலையில் ஸ்னூக்கர் போட்டியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக வெற்றி பெற்றார், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரோஹண பண்டார இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
மேசைப்பந்தாட்டம்
மேசைப்பந்தாட்டம் இரட்டையர் பிரிவில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் நிலந்தி கோட்டாச்சி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மேசைப்பந்தாட்டம் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் நிலந்தி கோட்டாச்சி வெற்றி பெற்றார், நாடாளுமன்ற உறுப்பினர் சாமிந்த்ராணி கிரியெல்ல இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
மேசைப்பந்தாட்டம் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே வெற்றி பெற்றார்.
சதுரங்கப் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அருச்சுனா வெற்றி பெற்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
கேரம் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரகீத் மதுரங்க முதலிடம் பெற்றார்.
விளையாட்டு அமைச்சர் சுனில் குமார இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
