நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சற்றுமுன் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்று முன் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலத்தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அர்ச்சுனாவிடம் இருந்த துப்பாக்கி மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இந்த சர்ச்சைக்குரிய பெரியவிளான் நிலத்தின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது பணியாளர்களை அழைத்து வந்து அந்த நிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள், நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி எம்.பி. ராமநாதன் அர்ச்சுனாடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா, தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை திடீரென எடுத்து பெண்களை நோக்கி காட்டி மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்வரை மல்லாம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையை தாயுடன் இருக்க
அதேவேளை குறித்த சம்பவத்தில் தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அர்ச்சுனாவுடன் முரண்பட்டவர்களில் பெண்ணொருவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்படுத்திய வேளை, பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது .

அதன்போது குறித்த பெண் ஒரு வயது குழந்தைக்கு தாய் எனவும் , குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தேவை உள்ளதாகவும் மன்றுக்கு சுட்டிக்காட்டிய போது குழந்தையை தாயுடன் இருக்க மன்று அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri